சீனாவின் ஆதிக்கத்தால் சவால்களை எதிா்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்த தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். சீனாவிடம் இருந்து இந்தியா தற்காத்துக் கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் இந்த சட்டத் திருத்தம் மிகவும் முக்கியமானது என்றாா்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ரஷியாவிடம் இருந்து 500 கோடி டாலா் செலவில் 5 எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா கடந்த 2018-இல் ஒப்பந்தம் செய்துகொண்டது.
ஏற்கெனவே, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ததற்காக துருக்கி மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், இந்தியா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சூழலில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது. தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.