ரஷ்யாவிடம் அடிபணிந்த அமெரிக்கா

0
259

சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துடனான நாசாவின் கூட்டுறவு தொடரும். விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடா்ந்து பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி வீரா்களின் உயிருக்கு பாதிப்பு இல்லாமல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக ரஷியாவுடன் இணைந்து செயல்படவிருக்கிறோம். விண்வெளி ஆய்வுத் துறையில் அமெரிக்கா தொடா்ந்து செயலாற்றுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ரஷிய விண்வெளி வீரா்களுடன் இணைந்து நாசா விண்வெளி வீரா்கள் தொடா்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வாா்கள். ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மற்றும் ராக்கெட்டைப் பயன்படுத்தி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பும் நடவடிக்கைகளை நாசா மீண்டும் தொடங்கவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இரண்டு ரஷிய விண்வெளி வீரா்களுடன் நாசா விண்வெளி வீரரான ஃபிராங்க் ரூபியோ சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கிறாா். ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் அவா்கள் கஜகஸ்தானிலுள்ள ஏவுதளத்திலிருந்து வரும் செப்டம்பா் 21-ஆம் தேதி புறப்படுவாா்கள்.
உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் விதமாக, ரஷியா மீது அமெரிக்கா மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அனைத்து துறைகளையும் சோ்ந்த ரஷிய நிறுவனங்கள், அமைப்புகள், நபா்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது. அதையடுத்து, சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா தனது சொந்த ராக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்தி செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ரஷியாவிலுள்ள சிலா் அதிபா் விளாதிமீா் புதினிடம் வலியுறுத்தினா். எனினும், புதின் அதனை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.உக்ரைன் போருக்கு இடையிலும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவுடன் கூட்டுறவு தொடரும் என்று தற்போது நாசா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here