யாசின் மாலிக் ஐ அடையாளம் காட்டினார் ருபியா சையீத்

0
399

வீ.பி. சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் முஃப்தி முஹம்மது சையீத். இவரது இரண்டாவது மகள் ருபியா சையீத். தற்போது சென்னை யில் வசித்து வருகிறார். 1989 ஆம் வருடம் ருபியா சையீத் மற்றும் 3 பேர் கடத்தப்பட்ட னர். (கடத்தல் நாடகம் நடத்தப்பட்டது).
கொலைகார பயங்கரவாதி யாசின் மாலிக் கடத்தல்காரன். 2 ஆண்டுகள் முன்பு கைது செய்யப்பட்ட அவன் தற்போது சிறையில் உள்ளான். கடத்தல் வழக்கு விசாரிக்கப் பட்டு வருகிறது. இந்த வழக்கில் தான் ருபியா சையீத் விசாரணை செய்யும் அதிகாரிகளிடம் யாசின் மாலிக் ஐ அடையாளம் காட்டி உள்ளார். வழக்கில் இது ஒரு முக்கிய சாட்சியாகும். அடுத்த விசாரணைக்கு ஜூன் 23 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. இது நாள் வரை இந்த கடத்தல் நாடகம் பற்றி வாய் திறவாமல் இருந்து வந்த ருபியா சையீத் சாட்சி சொல்ல முன்வந்து இருப்பது யாசின் மாலிக்கிற்கு மேலும் ஒரு வழக்கில் தண்டனை கிடைக்கப் போவதை உறுதிப் படுத்துகிறது. 33 வருடங்களுக்குப் பிறகாவது விசாரணை துவங்கியுள்ளதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here