நூபுர் சர்மாவை கொல்ல இந்தியா வந்த பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதி கைது  

0
235

பதுடெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொலை செய்ய சர்வதேச எல்லை வழியாக இந்தியா வந்த பாகிஸ்தானியர் ஒருவர் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புலனாய்வுப் பணியகத்தின் (ஐபி) கூட்டுக் குழு மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

அந்த நபர் ஜூலை 16 ஆம் தேதி இரவு 11 மணியளவில் இந்துமல்கோட் எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் இருந்து கைது செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) மூத்த அதிகாரி தெரிவித்தார். ரோந்து குழுவினரால் சந்தேகத்திற்கிடமான நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவரை பிடித்து சோதனை செய்தனர்.

“அவரிடமிருந்து பையில் 11 அங்குல நீளமான கத்தி, மத புத்தகங்கள், உடைகள், உணவு மற்றும் மணல் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் தன்னை ரிஸ்வான் அஷ்ரப் என்றும், பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காட்டினார்.

முதற்கட்ட விசாரணையில், நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக நுபுர் ஷர்மாவை கொலை செய்ய எல்லை தாண்டியதாக சந்தேக நபர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார். அவர் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு முதலில் அஜ்மீர் செல்ல திட்டமிட்டிருந்தார்.

மேலும் விசாரணைக்காக அவரை உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர், எட்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அவரைப் பற்றி சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

IB, RAW மற்றும் Military Intelligence ஆகியவற்றின் கூட்டுக் குழு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here