விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், ‘ஹரியானாவின் மேவாட் பகுதியில் தவாடு என்ற இடத்தில் டி.எஸ்.பி சுரேந்திர சிங், சில பயங்கரவாத குற்றவாளிகளால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. ஹரியானாவின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு சவாலாக உள்ளது. பட்டப்பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டால், அங்கு பாதுகாப்பு நிலைமை என்னவாக இருக்கும், அங்குள்ள சாதாரண ஹிந்துக்களின் உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பின் நிலை என்ன என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம். டி.எஸ்.பி சுரேந்திர சிங்கின் தியாகம் வீண் போகாது. அந்த கொலையாளிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு மரண தண்டனைக்கு குறைவான தண்டனை கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இனியும் மேவாட்டில் எந்தவிதமான மெத்தனமும் இருக்கக்கூடாது. குற்றவாளிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு, அவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களை புல்டோசர் மூலம் தகர்க்க வேண்டும். இந்த ஜிஹாதிகளின் வரவிருக்கும் 10 தலைமுறையினரும் இதுபோன்ற குற்றங்களைச் செய்வதற்கு முன் 10 முறை சிந்திக்கும் வகையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். மேவாட்டில் ஒவ்வொரு ஹிந்துவும் ஒவ்வொரு நாளும் ஆதரவற்ற நபரைபோல வாழ்க்கையை நடத்துகிறார். லவ் ஜிகாத், பசு வதை மற்றும் ஹிந்துக்கள் மீதான கொடுமைகள் இன்னும் நிற்கவில்லை. சிலர் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தவும், சகவாழ்வை உறுதிப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மற்ற இடங்களில் நடந்தது போலவே தோல்வியடைகிறார்கள். பதிலுக்கு அவர்களிடம் இருந்து ‘சர் தான் சே ஜூடா’ (உடலிலிருந்து தலையை வெட்டுதல்) என்ற ஜிஹாதி மிரட்டல்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. குற்றவாளிகளின் அடாவடித்தனம் அதிகமாகியுள்ளது. அவர்கள் பலமுறை காவல் துறையினரைத் தாக்கியுள்ளனர். இன்று எல்லை மீறிவிட்டனர். இந்தக் குற்றவாளிகளின் அடாவடித்தனமும், ஜிஹாதியிசமும் முற்றிலுமாக நசுக்கப்பட வேண்டிய நேரம் இது. இந்த ஜிகாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரியானா அரசுக்கு வி.ஹெச்.பி வேண்டுகோள் விடுக்கிறது’ என கூறினார்.