விண்வெளி ஆராய்ச்சியில் மதிப்புமிக்க நாடு இந்தியா : இஸ்ரோ துணை இயக்குனர் 

0
188

‘விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை புறம் தள்ளிய மேலை நாடுகள் மத்தியில்  தற்போது இந்தியா மதிப்பு மிக்க நாடாக உயர்ந்துள்ளது” என இஸ்ரோ துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் பேசினார்.
திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நிறுவனர் தின விழா தாளாளர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.
செவ்வாய் கிரகத்தில் விண்வெளி மையத்தை முதல் முயற்சியிலேயே கொண்டு சேர்த்தோம். ஆனால் பல நாடுகள் 30 முதல் 50 முயற்சிகளை மேற்கொண்டனர். மாணவர்கள் நிறைய கற்று புதிய சிந்தனைகளுடன் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் உங்களை சுற்றி ஒரு புதிய உலகம் இயங்கும். தலைமை பண்பு தேடி வரும். மாணவர்களுக்கு தேடல் மிகவும் அவசியம்.
அறிவியல் நுட்ப வளர்ச்சிக்கு கணிதம், இயற்பியல் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here