சர்வதேச எல்லையில் ஊடுருவிய பறக்கும் பொருள் மீது துப்பாக்கி சூடு

0
267

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராணுவ வீரர்களுடன் இணைந்து, பயங்கரவாத ஊடுருவல், ஆயுத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு பணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீரின் கனாசக் பகுதியில் சர்வதேச எல்லையில் அடையாளம் தெரியாத மர்ம பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு மின்னும் ஒளியுடன் கடந்து செல்ல முயற்சித்து உள்ளது. இதனை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here