காரைக்குடி ஜில்லா சாங்கிக்கில் “சுதந்திரப் போராட்டத் தலங்களின் தரிசனம்” என்ற நூலை அகில பாரத பொதுச் செயலாளர் மானனீய தத்தாத்ரேய ஹொசபலே வெளியிட்டார்

0
261

காரைக்குடி. ஆகஸ்ட் 14. இன்று காரைக்குடியில் நடைபெற்ற ஜில்லா சாங்கிக்கில் ராஷ்டிரிய சுயம்சேவாக சங்கத்தின் அகில பாரத பொதுச் செயலாளர் மானனீய தத்தாத்ரேய ஹொசபலே ஆதலையூர் சூர்யகுமார் அவர்கள் எழுதிய “சுதந்திரப் போராட்டத் தலங்களின் தரிசனம்” என்ற நூலை அறிமுகம் செய்து வெளியிட்டார்.

மேற்படி நிகழ்சி தஷிண தமிழகத்தின் சிவகங்கை ஜில்லாவில் உள்ள காரைக்குடியில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக 14ம் தேதி மாலை 5மணிக்கு நடைபெற்ற 75வருட சுதந்திர அமுத பெருவிழாவின் நிகழ்வாக நடைபெற்றது. இதில் சங்கத்தினுடைய சர்கார்யவாஹ் மானனீய ஶ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் ஷேத்ர சங்கசாலக் மானனீய டாக்டர் வன்னியராஜன் ஜி, ப்ராந்த சங்கசாலக் மானனீய ஶ்ரீ ஆடலரசன் ஜி, விபாக் சங்கசாலக் மானனீய ஶ்ரீ மங்கேஸ்வரன் ஜி ஜில்லா சங்கசாலக் மானனீய ஶ்ரீ நாச்சியப்பன் ஜி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஜில்லா முழுவதிலிருந்து 1200 ஸ்வயம்சேவகர்கள் சுப்ரவேஷில் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சி சரியாக மாலை 6:30க்கு நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here