சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடி அவமதித்த அரசு பள்ளி தலைமையாசிரியை : சி.இ.ஓ., அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்.

0
261

நாடு முழுதும் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசு பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி தேசியக்கொடியை ஏற்றவில்லை.ஏற்றிய தேசியக்கொடிக்கும் தலைமையாசிரியை மரியாதை செலுத்தாமல் இருந்துள்ளார்.ஊர் மக்கள் அவரிடம் கேட்டபோது, ‘உலகளாவிய கிறிஸ்துவ அமைப்பில் நான் உள்ளேன். யாகோபுக்கு மட்டும் தான் வணக்கம் செலுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.பேடரஹள்ளி மக்கள், தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அதன்படி விசாரிக்க, தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது.தலைமையாசிரியை தமிழ்செல்வியின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். பெற்றோர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here