பிரதமர் மோதி, சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா & அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒளிபரப்பப்பட்டது.
1498ஆம் வருடம் கோழிக்கோட்டிற்கு வாஸ்கோடகாமாவின் வருகையில் இருந்து தேசம் சுதந்திரம் பெறும் வரை நடந்த போராட்டங்களின் ஒரு தொகுப்பு ஸ்வராஜ்.
வெளிச்சத்திற்கு வராத எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட போராளிகளின் வீரதீரச் செயல்கள், போராட்டங்கள் பற்றிய தொகுப்பு ஸ்வராஜ்.
ராணி அப்பக்கா, பக்ஷி ஜகபந்து, திரோட் சிங், சித்து முர்மு, கானு முர்மு, சிவப்பா நாயக், கானோஜி ஆங்ரே, ராணி கைடின்லியு, திலகர மாஜ்ஜீ, ராணி லட்சுமிபாய், சத்ரபதி சிவாஜி, தாந்தியா தோபே, மேடம் பிக்காஜி காமா போன்றவர்கள் பற்றி தெரிந்து கொள்ள இப்படம் பயனுள்ளதாக இருக்கும்.
ஆகஸ்ட் 14 அன்றே தூர்தர்ஷனில் ஒளிபரப்பு தொடங்கிவிட்டது. வாஸ்கோட காமா கோழிக்கோடு, கொச்சியில் செய்த அட்டூழியங்கள் படுகொலைகள் ஒளிபரப்பு ஆகியது.
தமிழ், மலையாளம், கன்னடம். தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் இத்தொடர் ஆகஸ்ட் 20 முதல் வாரம் ஒரு தொடர் வீதம் 75 வாரங்கள் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
பொதிகையில் 20 ஆம் தேதி தமிழில் இரவு 9 முதல் 10 வரை ஒளிபரப்பாகும்.
தெரியாத தேசவிடுதலைக்காக போராடிய வீரர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு இது.