மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில் : ஒரு நாடு சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. வெறுமனே மலைகள் மற்றும் ஆறுகளால் எந்த ஒரு நாடும் சிறந்த நாடாக அமையாது. தேசிய கல்விக்கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை இந்திய கலைகள், கலாசாரம், தாய்மொழி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது இந்திய மாணவர்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களை நிச்சயம் ஈர்க்கும்.
முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவனை குறிப்பிட்ட துறையில் நிபுணராக மட்டுமே மாற்றியது, புதிய தேசியக் கல்விக் கொள்கை மட்டுமே மாணவனை சிறந்த மனிதனாக மாற்றிக்காட்டும்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் மூலம் மாபெரும் இந்தியாவை உருவாக்குவதற்கான விதைகளை பிரதமர் மோடி தூவியுள்ளார்; அடுத்த 20 ஆண்டுகளில் ஆலமரமாக உருவெடுத்து இந்தியாவை மட்டுமல்லாமல், உலகம் முழுவதையும் வழிநடத்தும். என்று பேசினார்.