ப்ரக்ருதி வந்தனா – இயற்கை வழிபாடு

0
297
ஆகஸ்ட் 28 ,2022 – காலை 7 மணி முதல் 11 மணி வரை
இன்றைய பல்வேறு சுற்றுப்புற சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு மரம் வளர்த்தல் என்பது தான் பல்வேறு அறிஞர்கள் கருத்தாக உள்ளது .
நம் பாரம்பரியத்தில் வீடுகளில் துளசி , வேம்பு போன்றவைகள் வளர்ப்பதும் ,அதை வணங்குவதும் இயல்பான ஒன்றே . அது போல் பொது இடங்களில் வேம்பு , அரச மரங்களை வணங்குவதும் நம் இயல்பே .
ஒவ்வொரு திருக்கோயில்களை குறிப்பிடும் பொழுதும் தலமரம் ,தீர்த்தம் ஆகியவற்றின் பெயரோடு குறிப்பிடுவது நம் சிறப்பு .
மரங்களை காப்பதற்காக தியாகம் செய்த அமிர்தா தேவி , தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று சொன்ன ஜகதீஷ் சந்திர போஸ் வாழ்ந்த பாரத நாடு நம் நாடு .
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாள் , திருமண நாள் போன்ற நாட்களில் பயனுள்ள ஒரு மரத்தை அல்லது தாவரத்தை நட்டு அதை பராமரித்து பாரத நாட்டை , உலகை பசுமையாக்க உறுதி ஏற்போம் .
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. “
– என்ற குறளுக்கு ஏற்பே பல்லுயிருக்கும் ஆதாரமாக இருக்கும் மரங்களை வணங்குவோம் .
வணங்கி நம் பிறந்தநாட்கள் /திருமண நாட்களை கணக்கிட்டால் நம்மால் சராசரி 100 மரங்களை நட்டு பராமரிக்க இயலும் .
மரம் நடுவோம் .பாரத தேசத்தையும் , பூமி மாதாவையும்உலக வெப்பமயமாதலில் இருந்து காப்போம் என்று உறுதி ஏற்போம் .
இதன் அடிநாதம் தான் ப்ரக்ருதி வந்தனா – இயற்கை வழிபாடு நிகழ்ச்சி .
நீங்கள் உங்கள் இல்லத்தில் , ஊர்களில் ,அலுவலகத்தில் , கல்வி சாலைகளில் , நீங்கள் சார்ந்த அமைப்புகள் மூலமும் இந்த இயற்கை வழிபாட்டை செய்யலாம் .
இந்த இயற்கை வழிபாடுகளை அனைவருக்கும் தெரியுமாறு சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள் . மேலும் இதன் சம்பந்தமான புகைப்படங்களை உங்கள் ஊர் , பெயர் போன்ற விபரங்களோடு எங்களுக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும் .
paryavaransanrakshansouthtn@gmail.com
முக நூல் https://www.facebook.com/PSGSouthtamilnadu
ட்விட்டர்-@paryavaransanr1
தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு- PSG தென் தமிழகம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here