பிரதமர் மோடி பூலித்தேவருக்கு புகழாரம்

0
479

சுதந்திர போராட்டவீரர் நெற்கட்டான் செவல் பாளையக்காரர் பூலித் தேவரின் 307 வது பிறந்த தினம் இன்று. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவர் மணிமண்டபத்தில் மத்திய அமைச்சர்  இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட அறிக்கை : மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here