‘வோஸ்டாக் – 2022’ எனப்படும் பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சி, ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.ராணுவ செயல்முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் ரஷியாவுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.