நியூயார்க் நீதிமன்றதில் இந்திய வம்சாவளி நீதிபதி

0
289

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருண் சுப்பிரமணியன் என்ற சிறப்பை பெறுவார்.2006 முதல் 2007-ம் ஆண்டு வரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரூத்பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார். அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய பசிபிக் அமெரிக்க பார் அசோசியேஷன் வாழ்த்து தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here