வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் நிவாரண முகாம்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் சிந்து பிரதேசத்தில் வசிக்கக்கூடிய ஹிந்து சமுதாயத்திற்கு அரசு நிர்வாகம் செய்த கொடுமையின் உதாரணம் கிடைத்துள்ளது. சிந்து பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த ஹிந்துக்களை அரசு நிர்வாகம் நிவாரண முகாம்களில் இருந்து விரட்டி அடித்தது. அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று அரசு நிர்வாகம் கூறியது. அவர்களுக்கு உணவு மற்றும் குடி தண்ணீர் வழங்குவது முற்றிலுமாக மறுக்கப்பட்டது. அவர்கள் எங்கேனும் சென்று தங்கி கொள்ள இடமும் கூட இல்லாமல் இருந்தது மட்டுமின்றி பாகிஸ்தானில் மழையால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட கொடுமையை பதிவு செய்ய அங்கு சென்ற நஸருல்லாஹ் கத்தானி என்ற பத்திரிகையாளர் புதன்கிழமை பாகிஸ்தான் காவல்துறையினரால் மிரட்டி கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர் ஐந்து நாட்கள் வரை காவல்துறை காவலில் வைக்கப்பட்ட பிறகு திருப்பி அனுப்பப்பட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் நிலையை எடுத்துச் சொல்வதற்கான முயற்சியில் ஈடுபட்ட பொழுது கைது செய்யப்பட்டதாக நஸ்ருல்லாஹ் கத்தானி தெரிவித்தார்.