நீதிக் கல்வியை மதத்துடன் ஒப்பிடுவது தவறு உச்சநீதிமன்றம்

0
169

புதுடெல்லி கேந்திரிய வித்யாலயங்களில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டுக் கூட்டங்களில் சமஸ்கிருத சுலோகங்கள் (ப்ரார்த்தனா) கூறுவது சம்பந்தமாக ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்திருக்கிறது. P I L விசாரணையின் போது புதன்கிழமை உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில் பிரார்த்தனை என்பது நீதியின் விழுமியங்களை ஏற்படுத்துவதால் அதை ஒரு மதத்துடன் குறிப்பாக இணைத்து பார்க்கக் கூடாது.
ஒரு நாத்திக வழக்கறிஞர் மத்திய அரசு 2012 டிசம்பரில் போட்ட உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு அளித்தார். அம்மனுவில் கேந்திரிய வித்யாலயா அமைப்பு அதன் கீழ் உள்ள பள்ளிகளில் “அஸதோமா ஸத் கமய” என்ற பிரார்த்தனை இன்றியமையாதது என அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். நீதிபதி இந்திரா பானர்ஜி சூரியகாந்த் மற்றும் எம் எஸ் சுரேஷ் ஆகியோர்களின் அமர்வில் இது போன்ற பிரார்த்தனைகள் மாணவர்களுக்கு நீதியின் விழுமியங்கள் உருவாக காரணமாக இருக்கிறது என்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here