திரிபுராவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வங்க தேசத்தவர்களின் சட்ட விரோத ஊடுருவல் பற்றி சிறப்பு புலனாய்வு அமைப்பு (SIT) எச்சரிக்கை.
திரிபுரா வங்கதேச எல்லை 856 கி.மீ. உள்ளது. 85% சதவிகிதம் தடுப்பு முள் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத ஊடுருவல்காரர்களை எல்லை பாது காப்புப் படையினர் தொடர்ந்து கைது செய்து வந்தாலும் கூட முற்றிலுமாக நின்றபாடில்லை.இன்று கூட திரிபுராத் தலைநகர் அகர் தலாவில் ராஜ்நகர், ராம்நகர் பகுதியில் சட்ட விரோத ஊடுருவல்காரர்கள் 27 பேர் பிடிபட்டனர். கடந்த ஞாயிறன்று 20 பேர் பிடிபட்டனர்.திரிபுரா, மேற்குவங்கம், பீஹார், ஜார்கண்ட் வழியாக ஊடுருவி போலி அடையாள அட்டை ஆதார் கார்டு வைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் நாடெங்கிலும் ஊடுருவியுள்ளனர். இவர்களுடன் ரோஹிங்யாக்கள் வேறு வருகின்றனர்.