உக்ரைனுக்கு மனிதநேய உதவி – பாரதம்

0
276

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை தாக்குதலை தொடுத்தன. ரஷியா தொடங்கிய இந்த போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின், உக்ரைன் மக்களின் தேவைக்காக அந்நாட்டு சுகாதார துறை துணை மந்திரி ஒலெக்சி யரெமென்கோவிடம் 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை வழங்கி உள்ளார். அவற்றில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. உக்ரைன் நாட்டுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முதன்முறையாக மனிதநேயம் அடிப்படையிலான உதவிகளை இந்தியா அனுப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here