உச்ச நீதிமன்றம் நிபந்தனை பெயில் அளித்தும் சிறையில் இருக்கும் போலி ஊடகவியலாளன் சித்திக் கப்பன்

0
289

2020 ஆம் வருடம் உ.பி. ஹத்ராஸ் எனும் இடத்தில் ஒரு தலித் பெண் மரணத்தை மையமாக வைத்து பொய்ச் செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பரவச் செய்து பெரும் கலவரம் நடந்தது.
அந்நேரத்தில் கேரளாவில் இருந்து அங்கு சென்ற சித்திக் கப்பனை போலீசார் நடு வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்து சிறையில் தள்ளினர். பிணையில் விடுவிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது.
உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியும் சித்திக் கப்பனால் வெளியே வர முடிய வில்லை. மதுரா சிறைச்சாலையில் இருந்து வரும் அவரிடம் அமலாக்கத்துறை செய்து வரும் விசாரணை முடிவடையாத தால் அவரை வெளியே விட முடியாது என்று சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மற்றும் வெளிநாட்டு அடிப்படை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் சித்திக் கப்பன். கைது செய்யப்படும் போது எந்த ஒரு ஊடகத்தி லும் பணியில் இல்லாத அவர் தன்னை ஒரு ஜர்னலிஸ்ட் என்று கூறிக்கொண்டார்.
இம்மாதிரி தேச த்ரோஹிகளுக்கு மனித உரிமை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஜாமின் வழங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பது இந்த மெத்தப் படித்துள்ள நீதிவான்களுக்கு மட்டும் புரியாமல் போவது ஏனோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here