ம.பொ.சிவஞானம் 

0
549

1. 1906, ஜூன் 26 ம் தேதி பிறந்தார். ம.பொ.சி என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

2. மொழியின் மீதும், தேசத்தின் மீதும் மதிப்பும் பற்றும் கொண்டவர். தொழில் வளர்ச்சி மீதும் தொழிலாளரின் மேன்மை மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ம.பொ.சி, தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் போராடினார்.

3. அரசியல் பணி ஒருபக்கம், தொழிலாளர்களுடன் நல்லுறவு ஒருபக்கம் என்று இருந்து வந்த அதேவேளையில், சமூகத்திலும் பல பணிகளில் ஈடுபட்டார்.

4. 1968-ம் ஆண்டில் இருந்து மூன்று வருடங்கள், தமிழ்நாடு அரசு பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கதர் கைத்தொழில் வாரிய உறுப்பினராகவும் இருந்து செயலாற்றினார். 1976-ம் ஆண்டில், போலீஸ் கமிஷன் உறுப்பினராகவும் இருந்து செம்மையான முறையில் செயலாற்றினார்.

5. அரசியலில் நேர்மையாகவும், தொழிலாளர் நலனில் வீரியத்துடனும், சமூக நலனில் மிகுந்த அக்கறையுடனும் செயலாற்றிக் கொண்டிருந்த அதேகாலகட்டத்தில், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக, 1955-ம் ஆண்டில் பணியாற்றினார். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகங்கள் ம.பொ.சியின் மனசாட்சி என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். இதுவரை 150 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

6. இவரின் தமிழ்ப் புலமையால், 1950-ம் ஆண்டில், பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை, ‘சிலம்புச் செல்வர்’ எனும் பட்டத்தை வழங்கினார். அன்றில் இருந்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்றே அழைக்கப்பட்டார்.

7. 1966-ம் ஆண்டு, ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எனும் நூலை எழுதினார். இந்த நூலுக்காக, சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கப் பெற்றார் சிலம்புச் செல்வர். 1972-ம் ஆண்டு, ஜனாதிபதியிடம் “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.

8. 1976-ம் ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தாரால் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. 1976-ம் ஆண்டு, சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் ‘இயற்றமிழ்ச் செல்வம்’ என்ற பட்டம் வழங்கப்பெற்றது.

9. கல்வித் துறையில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் வகையில் “யுனெஸ்கோ” சார்பில் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இவரின் சேவையைப் பாராட்டி, சென்னைப் பல்கலைக்கழகமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1985-ம் ஆண்டு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

10. அக்டோபர் 3 ஆயிரத்து 1995 இவர் இறைவனடி சேர்ந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here