பீரங்கி பயிற்சியில் விபத்து: 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

0
393

புதுடில்லி-பீரங்கி பயிற்சியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:உத்தர பிரதேச மாநிலம், பபினா பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவ வீரர்கள், ‘டி 9’ பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கியின் பேரல் வெடித்ததில், இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here