ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் ப்ரயாக்ராஜ்ஜில் (உ.பி) அக்டோபர் 16-19 வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது என அகில பாரத ப்ராசார் ப்ரமுக் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடக்கும் இக்கூட்டத்தில் சர்சங்கசாலக், சர்கார்யவாஹ் மற்ற சஹ சர்கார்யவாஹக்கள் என அகில பாரத பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
45 மாநிலங்களின் ப்ராந்த சங்கசாலகர்கள் (மாநிலத் தலைவர்கள்), ப்ராந்த கார்ய வாஹாக்கள் (மாநில செயலாளர்கள்), ப்ராந்த ப்ரச்சாரகர்கள் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் நடந்த அகில பாரத பிரதிநிதி சபை முடிவுகளைப் பற்றிய தொரு ஆய்வு, இயக்கத்தின் விரிவாக்கப் பணி, தற்போது நாட்டில் நிலவி வரும் சூழல் பற்றிய விவாதம், சர்சங்கசாலக்கின் விஜயதசமி உரையின் தொடர் பணிகள் பற்றியும் விவாதிக்கப்படும் என சுனில் அம்பேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.