1. எம்.ஏ. சிதம்பரம் அக்டோபர் 12, 1918 ல் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தார்.
2. சர்க்கரை, இரும்பு, ஆட்டோமொபைல், கப்பல் எனப்பல தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் தமிழக அரசுடன் இணைந்து ஸ்பிக் உர ஆலையைத் தொடங்கியதில் இவருக்கு முதன்மைப் பங்குண்டு.
3. விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவரின் முயற்சியினால் சென்னையில் உருவானதுதான் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கம்.
4. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பொருளாளராகவும் இருந்துள்ளார்.
5. தமிழிசைக்கு தொண்டாற்றிய இவர் தமிழிசை சங்கத்தின் கௌரவச் செயலாளராக இருந்தார்.