பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

0
310

தீபாவளி, பொங்கல் என ஹிந்துக்கள் பண்டிகைகள் என்று வந்துவிட்டாலே தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சட்டம் என்ற பெயரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் மாற்று மத பண்டிகைகளின்போது அந்த சட்டம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும் என்பது நாம் வாடிக்கையாக பார்க்கும் ஒன்று. அவ்வகையில் தீபாவளி இன்னும் சில நாட்களில் வரவுள்ள சூழலில், அந்த சட்டம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று வெறும் 2 மணி நேரத்தில் மட்டுமே மக்கள் பட்டாசுகள் வெடிக்க வெண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மெல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here