ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஊழல், பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டிற்குள்ளான 36 போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவலத்துறையில் 36 போலீஸ் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.
இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடத்திய விசாரணையில், இவர்கள் பணிக்கு சரிவர வராமல் அலட்சியம் காட்டியதும், அடிக்கடி விடுமுறை எடுத்து வருவதும் தெரியவந்தது, இவர்கள் சிலர் ஊழலில் ஈடுபட்டதும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 36 போலீஸ் அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு அளித்து அரசு நிர்வாகம் உத்தரவிட்டது.