2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 2 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை எட்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

0
216

சென்னையில் நேற்று (16-10-2022) இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இணைந்து நடத்திய ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 2 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை எட்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், “கடந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் இந்தியா பலப் புதிய மைல்கற்களை பதிவுசெய்தது. வணிகப் பொருட்கள் துறைகளில் அமெரிக்க டாலர் மதிப்பில் 422 பில்லியன் மற்றும் சரக்குகள், சேவைகள் ஏற்றுமதியில் அமெரிக்க டாலர் மதிப்பில் 254 பில்லியன் ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் 2021-22-யில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் ஏற்றுமதித் துறையின் பங்களிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாண்புமிகு பிரதமரின் கூற்றுப்படி, ஒரு நாட்டை வளரும் நிலையில் இருந்து வளர்ந்த நிலைக்கு மாற்றுவதில் ஏற்றுமதி முக்கியப் பங்காற்றுகிறது” என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஏற்றுமதி துறைகளை உள்ளடக்கிய தமிழகத்தை சேர்ந்த ஏராளமான முன்னணி ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here