ஹிந்துக்களுக்கு மட்டுமே பட்டியல் பழங்குடியினருக்கான உரிமைகள்

0
236

பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷ்வ ஹிந்து பரிக்ஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் மத்திய செயற்குழு தலைவர் அலோக் குமார், “1950ம் ஆண்டில், அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட ஜாதிகள்) ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது ஹிந்து பட்டியல் ஜாதியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வசதிகள் கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தபோதிலும், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இந்த வசதியை மதம் மாறிய எஸ்சி.க்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பகுத்தறிவற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. எஸ்.சிக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மற்றவர்கள் பறிக்க அனுமதிக்க மாட்டோம். மதம் மாறிய பட்டியல், பழங்குடியினருக்கு எஸ்.சி, எ.ஸ்டிகளுக்கு சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு உரிமைகளைத் தொடர அனுமதிக்க முடியது. ஆபிரகாமிய மதங்கள் தங்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லை என்று கூறுவதால், அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை நீட்டிக்க முடியாது.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் நேரு உட்பட பல பிரதமர்கள், மதம் மாறிய பட்டியலின பழங்குடியினருக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி, தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் இந்தக் கோரிக்கையை ஏற்க முயன்றனர், ஆனால் நாடு தழுவிய போராட்டத்தால் அவர்கள் பின்வாங்கினர். 2005ல் சச்சார் கமிட்டியும், 2009ல் ரங்கநாத் கமிட்டியும் இது தொடர்பாக சில பரிந்துரைகளைச் செய்திருந்தன. கிறிஸ்தவ மிஷனரிகளும் முஸ்லீம் தலைமைகளும் தங்கள் மதங்களில் சமூக சமத்துவத்தைக் கோரும் அதே வேளையில் இந்தக் கோரிக்கையை எழுப்புவது வெளிப்படையாகவே முரண்படுகிறது. நீதித்துறையும் இதை, ஒவ்வொரு முறையும் நியாயமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நிராகரித்துள்ளது.

ஏற்கனவே, பாரதத்தின் பல பகுதிகளில் மக்கள்தொகை மாற்றத்தின் ஆபத்து, ஒரு மோசமான வடிவத்தை எடுக்கிறது. ஜம்மு காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை மாற்றத்தின் விளைவுகள், தேசிய நலனுக்கு விரோதமான மற்றும் தவறான மனப்பான்மையின் விளைவுகள் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. மேலும் இதனால், பாரதத்தின் அடையாளம் மற்றும் உலகக் கண்ணோட்டம் மற்றும் ‘சர்வ் பந்த் சமதர் பாவ்’ (அனைத்து மதங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கம்) என்ற முன்னுதாரணமும் நீர்த்துப்போகிறது.

பாரதத்தின் பட்டியலிடப்பட்ட ஜாதி சமூகங்களின் உரிமைகள் மதம் மாறியவர்களால் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. பணபலம், அரசியல் செல்வாக்கு மற்றும் சர்வதேச ஆதரவின் ஆதரவுடன், அவர்கள் இடஒதுக்கீட்டின் அனைத்து பகுதிகளிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள். இதனால், இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பட்டியல், பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காமல் போய்விடும். மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சதிகளை அம்பலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பரவலான பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை வி.ஹெச்.பி மேற்கொள்ளும்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here