ஆர்.எக்ஸ் குறியீட்டுக்கு பதிலாக ‘ஸ்ரீஹரி’: முதல்வர் கருத்தை ஏற்ற டாக்டர்

0
215

சட்னா: மத்திய பிரதேசத்தில் அரசு டாக்டர் தான் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டை ஹிந்தியிலேயே எழுதுவது மட்டுமின்றி டாக்டர்கள் பயன்படுத்தும் ஆர்.எக்ஸ் என்ற குறியீட்டுக்கு பதிலாக ‘ஸ்ரீஹரி’ எனவும் எழுதிக் கொடுக்க துவங்கியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு போபால் நகரில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ படிப்புக்கான ஹிந்தி புத்தகங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். அதில் பேசிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டாக்டர்களும் தங்கள் மருந்துச் சீட்டில் ஆர்.எக்ஸ் என்ற லத்தீன் மொழி குறியீட்டுக்கு பதில் ‘ஸ்ரீஹரி’ என குறிப்பிடலாம்’ என ஆலோசனை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சட்னா மாவட்டம் கோட்கர் என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் சர்வேஷ் சிங் முதல்வரின் ஆலோசனையை உடனே பின்பற்றத் துவங்கினார். அன்று மாலையில் இருந்தே தான் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் ‘ஸ்ரீஹரி’ என குறியிட்டு அதன் பின் மருந்துகளின் பெயர்களையும் ஹிந்தி மொழியிலேயே எழுதிக் கொடுக்கத்துவங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here