- புது தில்லி, அக். 20. பிரதமர் நரேந்திர மோடி, 10 லட்சம் பேரை வேலையில் சேர்ப்பதற்கான இயக்கமான ‘ரோஸ்கர் மேளா’வை அக்டோபர் 22-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்றும், விழாவில் 75,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்று PMO தெரிவித்துள்ளது.
மோடியின் வழிகாட்டுதலின்படி, அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் தற்போதுள்ள காலி பணியிடங்களை “மிஷன் முறையில்” நிரப்புவதற்கு பணிபுரிந்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.