தமிழகத்திற்கு விருது வழங்கினார் பிரதமர்

0
232

அனைவருக்கும் வீடு திட்டத்தில், இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்றதற்கான விருதை, பிரதமர் நரேந்திரமோடி, நேற்றுமுன்தினம் அமைச்சர் அன்பரசனிடம் வழங்கினார்.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தேசிய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்தது. விருது வழங்கும் விழா, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நேற்றுமுன்தினம் நடந்தது.

விழாவில், பிரதமர் மோடியிடம் இருந்து, தமிழக அமைச்சர் அன்பரசன், தமிழகத்துக்கான விருதை பெற்றார். மாநகராட்சிகளில், மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம்; பேரூராட்சிகள் பிரிவில், கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி ஐந்தாம் இடம் பெற்றதற்காக, விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சருடன், தமிழக வீட்டு வசதி துறை செயலர் ஹித்தேஷ் குமார் மக்வானா, வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here