அனைத்து பகுதிகளையும் இணைப்போம்

0
125

எல்லைச் சாலை அமைப்பான பி. ஆர்.உருவாக்கியுள்ள 75 உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Defence Minister Dedicates 75 BRO-Constructed Roads To Nation; Ensuring Economic Development Of Border Areas

லடாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், ஹிமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் இவை அமைந்துள்ளன. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டங்கள் ரூ. 2,180 கோடி செலவில் மிகக் குறைந்த காலத்தில் பி.ஆர்.ஓ’வால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சவாலான பருவநிலை சூழல்களுக்கு இடையே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள பி.ஆர்.ஓவின் உறுதிப்பாட்டை அமைச்சர் பாராட்டினார். மேலும், “இந்த திட்டங்கள் நாட்டின் பாதுகாப்பு தயார் நிலையை ஊக்குவிப்பதுடன், எல்லைப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும். ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின் பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்பாடு இல்லாததே அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க காரணம். இத்தகைய உள்நாட்டு இடையூறுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து லடாக் பகுதியும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது. இப்போது மத்திய அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை காண முடிகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை தொடர்வதே எங்களது நோக்கம். விரைவில் அனைத்து தொலைதூரப் பகுதிகளையும் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here