பயங்கரவாத எதிர்ப்பு முதன்மையான ஒன்று

0
156

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாரதத்தின் தற்போதைய பதவிக்காலத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஐ.நா கவுன்சில் இந்த சிறப்புக் கூட்டத்தை பாரதத்தில் நடத்துகிறது. கடந்த 20 ஆண்டுகளில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் அவற்றையும் தாண்டி, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இவை அதிகரித்துள்ளன. உலகளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பயங்கரவாத குழுக்களின் கருவியாக இணையம், சமூகஊடக தளங்கள் மாறிவிட்டன. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் புதிய சவால்களை எழுப்பியுள்ளன. பயங்கரவாத குழுக்களால் ஆளில்லா வான்வழி அமைப்புகள் பயன்படுத்தப்படுவது உடனடி ஆபத்தாக மாறியுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் மற்றும் எதிர்க்கும் முயற்சிகளை அதிகரிக்க, ஐ.நா அறக்கட்டளைக்கு பாரதம் அரை மில்லியன் டாலர்களை இந்த ஓராண்டில் வழங்கும்’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here