1. பிபின் சந்திர பால் 1858-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தற்போது பங்ளா தேஷ் நாட்டில் உள்ள சில்ஹட் மாவட்டத்தில் உள்ள போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர். “புரட்சி எண்ணங்களின் தந்தை” .
2. ஆசிரியர், பத்திரிக்கையாளர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை பெற்றவர்.
3. ஸ்ரீ அரவிந்தர் இவரை “மிகுந்த வல்லமையும் கொள்கைப்பிடிப்பும் உடைய தேசாபிமானி” என்றார்.
4. லால்-பால்-பால் என்று அழைக்கப்பட்ட மும்மூர்த்திகளில் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய்.
5. இம்மூவர்தான் சுயராஜ்ஜியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள்.
6. வந்தே மாதரம் இதழைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்றவர்.