சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

0
284

சென்னை: சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் இன்று (நவ.7) தொடங்கியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வரும் நவம்பர் 11-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரயில் சென்னையில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவிற்கு காலை 10.25 மணி சென்றடைகிறது. மைசூருவிற்கு மதியம் 12.30 மணி சென்றடைகிறது. இதன் வேகம் மணிக்கு 75.60 கி. மீ. வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூருவிற்கு 6 மணி நேரம் 40 நிமிடம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் இன்று (நவ.7) தொடங்கியது. சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5.50 மணிக்கு சோதனை ஓட்டமாக வந்தே பாரத் ரயில் மைசூரு புறப்பட்டு சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here