ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனங்கள் பல, தொடர்ந்து ஹிந்துக் கடவுள் மற்றும் தெய்வங்களுக்கு எதிராக மாணவர்களை ஊக்குவிப்பது போல செயல்படுவது சமீப காலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன் விஷன் ஐ.ஏ.எஸ் அகாடமி இந்த சர்ச்சையில் சிக்கியது.அந்த வரிசையில் தற்போது உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திருஷ்டி ஐ.ஏ.எஸ் அகாடமி இதே போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது. திருஷ்டி ஐ.ஏ.எஸ் அகாடமி ஆசிரியர் விகாஸ் திவ்ய கீர்த்தி என்பவர், தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களிடம் பேசுகையில், ஹிந்துக்கள் கடவுளாக போற்றி வணங்கும் ஸ்ரீராமர் மற்றும் சீதையை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். ஒரு சமஸ்கிருத எழுத்தாளரை மேற்கோள் காட்டி பேசிய அவர், ராமர் சீதாவிடம், “நான் இந்தப் போரை உனக்காக நடத்தவில்லை, என் பரம்பரை மரியாதைக்காக நடத்தினேன்.நாய் நக்கிய நெய் உணவிற்கு எப்படி பயன்படாதோ அதேபோல சீதா, உனக்கு என்னிடம் சேர எந்தத் தகுதியும் இல்லை” என கூறியதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பின்னர், தன்னை தற்காத்துக்கொள்ளும் விதமாக, இந்த வசனங்கள் ராமரால் சொல்லப்பட்டிருக்க முடியாது, ஆனால் இன்று பரவலாக பிரபலமாக இருக்கும் துசி தாஸின் ராமாயணத்தில் இடம் பெறாத ஆசிரியரின் வெளிப்பாடு இது என்று ஒரு வினோத விளக்கம் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ராமாயணத்தின் எந்தப் பதிப்பிலும் இதுபோன்ற உரையாடல்கள் எதுவும் இல்லை என்று பலர் வாதிட்டனர்.விகாஸ் திவ்ய கீர்த்தியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.