உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் சுமார் 400 ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சி நடைபெற்றது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில், ராஜஸ்தானின் வாடிகா கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 3 லட்சம் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் மிகப்பெரிய மதம் மாற்றும் சதி வெளிப்பட்டுள்ளது. ‘தர்ம ஜாக்ரன் மஞ்ச்’ அமைப்பு, ராஜஸ்தானில் மதமாற்றம் செய்வதற்காக 3 லட்சம் ஹிந்துக்களுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்பில் இருப்பதாகக் கூறி, அங்கு நடைபெறும் வெகுஜன மதமாற்றம் குறித்த தகவல்களை வெளியிட்டது. இந்த கிறிஸ்தவ மிஷனரிகள், சிலை வழிபாட்டை விமர்சித்து அப்பாவி ஏழை ஹிந்துக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து வெறும் 22 கிமீ தொலைவில் உள்ள வாடிகா கிராமமான தானி பைரவாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றனர். இந்த இடத்தில் சுமார் 400 ஹிந்துக் குடும்பங்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். சிலை வழிபாட்டை நிறுத்துமாறும் ஹிந்து மத பழக்கவழக்கங்களை பின்பற்றக் கூடாது; ஹிந்து தெய்வங்களை நம்பக்கூடாது என்றும் வற்புறுத்துகின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான செய்திகளைப் பரப்புவதன் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பட்டியலின பழங்குடியின மக்களை கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். ஹிந்துக் கடவுள் மற்றும் தெய்வங்களுக்கு எதிரான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என குற்றம் சாட்டியுள்ளனர். ராஜஸ்தான் அரசு, காவல்துறை, மற்றும் அதன் முதல்வர் அசோக் கெலாட்டும் இதுபோன்ற பெரிய சம்பவங்கள் குறித்த புகார்கள் எதுவும் அரசுக்கு வரவில்லை என்று கூறி பின்வாங்குவதுடன் பா.ஜ.க வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். பா.ஜ.க மூத்த தலைவரும், மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ராஜேந்திர ரத்தோர், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மதமாற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சனாதன் பிரபாத் அமைப்பும் அங்கு நடைபெறும் மதமாற்ற சதி குறித்து குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ரிபப்ளிக் டிவியும் இங்கு நடைபெற்று வரும் மதமாற்றங்கள் குறித்த செய்தியை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.