1. கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று (நவம்பர் 18 ,1936 ).
2. குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பு நிறைந்து இருந்தது.
3. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார்.
4. இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு வறுமையில் வாடவிடுவதை உணர்ந்து, சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஆங்கிலேயர்களுக்கு நிகராக கப்பல் போக்குவரத்திற்காக ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது.
5. சொந்தமாக காலியா மற்றும் “எஸ்.எஸ். லாவோ” கப்பல்களை வாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஓட்டினார். ஆங்கிலேயர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் கைது செய்து சிறையிலடைத்தனர்.
6. கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் சிறையில் செக்கிழுத்து புண்ணாகியது. சிறைச்சாலையின் கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’ என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.