“காசிக்கு துளசிதாசர் போல் – தமிழகத்திற்கு திருவள்ளுவர்” காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

0
104

வாரணாசி, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி-தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றார். “வணக்கம் காசி” “வணக்கம் தமிழ்நாடு” என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.

உத்தரப் பிரதேசத்தில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- காசி-தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன். நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது.

காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை போன்று தமிழ்நாடும் பழமை, கலசாரம் கொண்டது. தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டும் கோவில் காசியில் உள்ளது. காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளூவர். காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது.

பாரதியார் காசியில் பயின்றார், பல ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார் – காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. தமிழக திருமணங்களில் காசியாத்திரை என்ற வழக்கம் உண்டு. காசியும் தமிழ்நாடும் திருக்கோவில்களுக்கு பெருமை பெற்றவை. சமஸ்கிருதத்தில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகிறது.

பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் வேர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

‘ஜனனி ஜனனி ஜகம் நீ..’ இளையராஜாவின் பாடலில் தாளம் போட்டு பிரதமர் மோடி ரசித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here