ஏவுகணைகளை சேமிக்க சுரங்கப்பாதைகள்

0
147

நிலம் சார்ந்த முக்கிய குறுகிய தூர ஏவுகணைகளை சேமிக்கும் வகையில், எல்லை மாநிலங்களில் பல்நோக்கு சுரங்கப்பாதைகளை உருவாக்க பாரதம் திட்டமிட்டுள்ளது. சில காலமாக செயல்பாட்டில் உள்ள பாரதத்தின் பிரத்தியேக ராக்கெட் படை, வடிவம் பெறத் தொடங்கியுள்ள நிலையில் இந்த புதிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கட்டப்படும் இந்த இரட்டை பயன்பாட்டு உள்கட்டமைப்பு எல்லைப்பகுதிகளில் குவிக்கப்பட்டு வரும் சீனப் படைகளை குறிவைக்க பயன்படும். பிரலய் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்திய ஆயுதப்படைகள் விரைவில் வாங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைகள் இங்கு நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. சீனாவைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், தற்போதுள்ள ஏவுகணை சொத்துக்களையும் ஒரு ஒற்றைக் கட்டிடக்கலை மற்றும் கோட்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு பாரதம் ஒருங்கிணைந்த ராக்கெட் படையை உருவாக்கி வருகிறது.

சீன மக்கள் விடுதலை ராணுவ ராக்கெட் படை, உலகின் மிகப்பெரிய தரை அடிப்படையிலான வழக்கமான ஏவுகணைப் படையைக் கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் அளவு 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது,, சீன ராணுவத்தின்வின் ராக்கெட் படையின் மீதான அதிக நம்பிக்கையைக் குறிக்கிறது. ஒருவேளை பாரதத்துடன் மோதல் ஏற்பட்டால், போரின் ஆரம்ப கட்டங்களில் ராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், விமான தளங்கள், படை குவிப்புப் பகுதிகள், தளவாட முனைகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்பு போன்ற முக்கிய செயல்பாட்டு இலக்குகளை தாக்க சீனா ராக்கெட் படையை பயன்படுத்தலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே, ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் வகையில் சீனா பீடபூமியில் சுரங்கப்பாதைகளை அமைத்து வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, அத்தகைய தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க பாரதம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டும் தரை அடிப்படையிலான பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. ஆனால் கூட்டு செயல்பாடுகள் அல்லது கூட்டுத் திறன்கள் இல்லாததால் அவற்றை உடனடியாக உகந்த முறையில் பயன்படுத்த முடியாது. ஒரு ஒருங்கிணைந்த ராக்கெட் படை ராணுவத்தின் அதிக திறன்மிக்க ஏவுகணை சக்தியின் செறிவை பூர்த்தி செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here