பருவநிலை மாற்றத்தில் கவனம்

0
162

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாடங்கள், செயற்கைக் கோள்கள், விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதை வேளையில் அதிக கவனம் பெறாத துறைகளிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். பருவநிலை மாற்றம் உலகில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. வேளாண்மை துறையிலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு பருவநிலை மாற்றத்தை தடுப்பது மற்றும் எதிர்கொள்வதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் புத்தாக்க நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். சிறு தானியங்கள் உற்பத்தி, விவசாயிகளின் வருவாயை உயர்த்துதல் ஆகியவற்றில் புத்தாக்க நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பருவநிலை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். யாராலும் அதனை ஈடு செய்ய முடியாது. பருவநிலை மாற்றத்தால் ஒரு சில நாட்களில் அதீத மழை மொத்தமாக பெய்கிறது. இதில் இருந்து எந்த ஒரு நகரமும், கிராமமும் தப்பமுடியாது. இந்த மாதிரியான பருவநிலை சார்ந்த ஆராய்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெற வேண்டியது அவசியம்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here