1. கோவைக்கிழார் 1888ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் மருதாசலம் செட்டியார் – கோனம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார். வழக்குரைஞராய் இருந்து தமிழறிஞரானவர்.
2. தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
3. வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு, கல்வெட்டு, கவிதை, உரைநடை, நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார்.
4. இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத கொங்குநாட்டு வரலாற்றை எழுதினார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
5. இந்து அறநிலையத் துறை ஆணையாளராக விளங்கியபோது தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துக் கோயில்களுக்கும், இவரே நேரில் சென்று அத்தனைக் கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, கோயில் அமைந்திருந்த சூழல் ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக குறிப்புகள் எழுதியுள்ளார்.