இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கீதா ஜெயந்தி

0
134

கேரள கீதா ஜெயந்தியை முன்னிட்டு இங்கிலாந்தில் உள்ள சனாதன் சன்ஸ்தா (SSUK) அமைப்பு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அவையில் பொது முதல்முறையாக கீதா ஜெயந்தி நிகழ்ச்சியை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு ஹாரோ ஈஸ்ட் பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் தலைமை தாங்கினார். அமிஷ் திரிபாதி, கலாச்சார அமைச்சர் மற்றும் நேரு மையத்தின் இயக்குனர், இங்கிலாந்தின் இஸ்கானில் உள்ள மூத்த துறவி சாந்த் கேசவ் மகராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதன் நோக்கம் பகவான் கிருஷ்ணரின் செய்தியை உலகிற்கு பரப்புவதற்காகவே என சனாதன் சன்ஸ்தா அமைப்பு தெரிவித்துள்ளது.

சலோனி பெலெய்ட், அபி யோகி மற்றும் சில குழந்தைகளுடன் ‘வாசுதேவ சூதம்’ வாசிக்கும் ஸ்லோகத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து கேசவ மஹராஜ், பகவத் கீதை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கீதையைப் பின்பற்றும்போது அது நமது வாழ்க்கையில் எப்படி இன்னும் பல தனிப்பட்ட முறையிலான நல்ல தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் விளக்கினார். பின்னர், சனாதன் சன்ஸ்தா அமைப்பின் அபி யோகி, சனாதன் சன்ஸ்தா அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை விளக்கினார். ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் குமார், குருக்ஷேத்திரம் மற்றும் ஹிந்து வரலாற்றின் பல்வேறு இடங்களைப் பார்க்க ஹரியானாவில் இன்றும் செல்லக்கூடிய பல்வேறு இடங்களைப் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
ஹாரோ ஈஸ்ட் எம்.பி.யான பாப் பிளாக்மேன் தனது உரையில், “ஹிந்துக்கள் தங்கள் தர்மத்தைக் வெளிக்காட்டுவதில் பயப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் மிகவும் அமைதியானவர்கள், எப்போதும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் செய்தியை வழங்குகிறார்கள்” என்று கூறினார். அமிஷ் திரிபாதி தனது உரையில் வேத வரலாற்றில் இருந்து பல சம்பவங்களை எடுத்துரைத்தார். ஹிந்துக்கள் தங்கள் அறிவை எதிர்கால சந்ததியினருக்கு திறம்பட கற்றுத்தர கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில், 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமஸ்கிருத
ஸ்லோகங்களை ஓதினர். இளைஞர்கள் கீதையைப் படிப்பது குறித்தும் அது, அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது, டீன் ஏஜ் பிரச்சனைகளை எப்படி சமாளிக்க உதவியது என்பது குறித்தும் பேசினர். பஜனைகள், கிருஷ்ணரைப் பற்றிய ஒரு தனிப்பாடல் மற்றும் பல ஆன்மீக மற்றும் கலாச்சார விஷயங்களால் இந்நிகழ்வு நிறைந்திருந்தது. பகவான் கிருஷ்ணரின் செய்தியை வழங்குவதில் இளைஞர்களுடன் இணைந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த குழந்தைகளின் பங்களிப்புடன் இந்த நிகழ்வின் மிகவும் சிறப்பாக அமைந்தது. சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த ஹிர்தேஷ் குப்தாவின் நிறைவு உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட பகவத்கீதை புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here