ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்; அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு

0
391

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான ஆடை அணிந்து வரும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

கோவிலுக்குள் லுங்கி, அரைக்கால் சட்டை அணிந்து பலர் வருகின்றனர். எனவே, ஹிந்து அல்லாதவர்கள் கோவில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை, நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். ஆடை கட்டுப்பாட்டையும் குறிப்பிட வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்பளித்த நீதிபதிகள் பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது முறையான ஆடையை அணிந்து வர வேண்டும்; இதை கோவில் நிர்வாகங்கள் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நீதி அறிவுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here