ஆதார் இணைப்புக்கு புதிய இணையதளம்

0
256

மின் இணைப்பு ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் முடியும் என எண்ணுடன், செலுத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மின்நுகர்வோர் பலர் ஒரே சமயத்தில் மின்வாரிய
இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் அடிக்கடி முடங்கியது. மின்கட்டணத்தையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நவம்பர் 28 முதல் இம்மாதம் 31ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்பட்டனர். இதனையடுத்து, மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் புதிய இணையதள முகவரிய மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,https://adhar.tnebltd. org/Aadhaar/ என்ற இணையதளத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். மேலும், முன்னர், ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அது தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here