பாரதத்தின் ஜி20 தலைமைக்கு ஆதரவளித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பாரதத்தின் ஜி20 தலைமைக்கு ஆதரவு அளித்ததற்காக இம்மானுவேல் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் டுவீட்டுக்கு பதிலளித்த பிரதமர், “எனது அன்பு நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நன்றி! ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் உலகின் கவனத்தை ஒருமுகப்படுத்த நாங்கள் பணியாற்றுவதால், பாரதத்தின் ஜி20 தலைமையின் போது உங்களுடன் நெருக்கமாக ஆலோசனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என கூறியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் வாழ்த்து டுவீட்டிற்கு பதிலளித்து பிரதமர், “உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது. உலகளாவிய நல்வாழ்வுக்கு ஜப்பான் நிறைய பங்களித்துள்ளது மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான் கண்டுள்ள வெற்றிகளிலிருந்து உலகம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் வாழ்த்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, உங்கள் கனிவான பணிகளுக்கு நன்றி. வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த கிரகத்தை விட்டுச் செல்ல நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள கூட்டாகச் செயல்படுவது குறித்த உங்கள் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்” என டுவீட் செய்தார். இதேபோல, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேலின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பிரதமர், “நன்றி சார்லஸ் அவர்களே!. உலகளாவிய நன்மதிப்பை மேம்படுத்துவதற்காக நாம் கூட்டாகச் செயல்படும்போது உங்களின் தீவிரப் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்” என்றார். பாரதத்தின் ஜி20 தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆதரவுக்கு ன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “நன்றி @POTUS அவர்களே. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு பாரதத்தின் ஜி20 தலைமைக்கு மேலும் பலம் அளிக்கும். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்” என நன்றி தெரிவித்துக்கொண்டார்.