பகவத் கீதையின் காலத்தை கடந்த பொருத்தம், மிகைப்படுத்தப்பட்ட தற்கால டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானது, அவசியமானது. இனி வரும் தலைமுறைகளுக்கும் இது பொருத்தமானதாகவே இருக்கும். கீதையின் ஆழமான மற்றும் நடைமுறைப் போதனைகள் அவர்களின் முதன்மை பிரச்சனைகளான மன அழுத்தம், குழப்பம், கவனமின்மை மற்றும் உந்துதல் போன்றவற்றைக் கையாள்வதில் அவர்களுக்கு சிறந்தமுறையில் உதவும். இருப்பினும், தற்கால தலைமுறையின் குறுகிய மற்றும் குறைந்து வரும் கவனத்தின் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களுக்காகவே, பாரத பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், கீதையின் காலத்தால் அழியாத போதனைகளை விரைவாக புரிந்துகொள்ள 3 நிமிட வீடியோ மற்றும் பி.டி.எப் பதிப்பில் ஒரு புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கீதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுமார் 8 முதல் 10 வினாடிகளில் படிக்கலாம். 18 அத்தியாயங்களில் இருந்து முக்கிய பாடங்களை வெறும் 3 நிமிடங்களில் கற்றுக் கொள்ளலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 14 மொழிகளில் கிடைக்கும் இந்த கீதையின் சுருக்கத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் அறிஞர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தஞ்சை, கலம்காரி, பிச்வாய், கேரள சுவரோவியம், மதுபானி, மிதிலா, ராஜஸ்தானி மினியேச்சர், காளிகாட், போடோசிட்ரோ மற்றும் பத் போன்ற 10 வெவ்வேறு பாரம்பரிய பாரத கலை வடிவங்களை காட்சிப்படுத்துகிறது. இந்த கலை வடிவங்கள் பாரம்பரியமாக கிருஷ்ணரை சித்தரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மாறுபட்ட விளக்கக்காட்சி, கீதையை பார்வைக்கு வசீகரிக்கும் மற்றும் ஆன்மீக ரீதியில் வளப்படுத்துகிறது. இப்புத்தகத்தை வீடியோ மற்றும் பி.டி.எப் வடிவில் https://www.cycle.in/downloadshrimadbhagavad gita?utm_source=PR&utm_medium=News&utm_campaign=PRCoverage என்ற இணையபக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.