தர்மம் காத்த தனயன்

4
293

ஆன்மீக குடும்பம், காலையில் சாமி கும்பிட்டுவிட்டு ராம்நாத் குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு போகிறார். சரியாக 10.35 மணிக்கு , தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள கனரா  பேங்கில் நுழைகிறார். மாற்றலாகி ஜாயின்ட்  செய்த முதல் நாளே ஐந்து நிமிடம் தாமதமாக வந்திருக்கிறாயே என்றார் மேனேஜர். சரியாக நாளையிலிருந்து வருகிறேன் என்றார் ராம்நாத். சரி என்றார் மேனேஜர். வேலையை சரியாகவும் வேகமாகவும் செய்கிறார் அதுமட்டும் அல்ல. சகஊழியர்க்கும் உதவி செய்கிறார்.

கணினியை கையாளுவதில் திறமைசாலி. ஒவ்வொரு நாளும் தாமதமாகத்தான் வருகிறார். மேனேஜர் ஒருமாதம் சொல்லி பார்த்தார் கேட்கவில்லை. 15 நிமடம் தாமதமாக வந்தால் அரைநாள் விடுமுறை. இப்படி மாதத்தில் 10 நாள் விடுமுறை ஆகிறது. பலநாள் சம்பளம் இல்லாத அரைநாள் விடுமுறை. பலநாட்கள் மதியம் சாப்பிடுவதில்லை. சக ஊழியர் ஏன் சார் உங்கள் மனைவி சமைத்து தரமாட்டாளா?. இல்லை அவள் அம்மாவீட்டிற்கு போகியிருக்கிறார். என்பார். மற்றும் பல நாட்கள் வெறும் சாதம் ஊறுகாய் மட்டும் தான் இருக்கும். அப்பொழுது சக ஊழியர் யாராவது கேட்கும் போதும் ஏதேதோ காரணம் சொல்வார்.

இப்படி 6 மாதம் மேல் ஆகிவிட, சகஊழியர் தேவகி அம்மா கேட்பார், உங்கள் வீட்டில் சார் யார் இருக்கிறார்கள் என்று. நான் மனைவி, அம்மா, குழந்தை. ஏன்சார் அம்மாவும் உங்களுக்கு உதவி செய்யமாட்டார்களா? அப்பொழுதும் ஏதேதோ காரணம் சொல்வார். தினசரி 5.30 மணிக்கு புறப்பட்டுவிடுவார். ஒரு நாள் 5 மணிக்கே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அன்றைய தினம் மாலையில் பேங்க் பூட்டுவதற்கு முன்னால் ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சார் ராம்நாத் சார் மட்டும் எவ்வளவு சொல்லியும் தாமதமாகத்தான் வருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என்றார்கள் தங்களுக்குள். ஒருமாதத்தில் மூன்றுநாள் தொடர்ந்து விடுமுறை கேரளா சுற்றுலா போவதற்கு திட்டமிடுகிறார்கள். ராம்நாத் சாரிடம் கேட்கிறார்கள். அவர் சார் என்னுடைய அம்மாவினுடைய 84 வது பிறந்தநாள். அதனால் வரமுடியாது சார் என்றார். சரி பரவாயில்லை என்று சொல்கிறார் மேனேஜர். சுற்றுலா முடிந்து. குற்றாலத்தில் குளித்து வருவதாக திட்டம்.

மூன்றாம் நாள் குற்றாலத்திற்கு வந்த உடன் தேவகி அம்மா மேனேஜர் சாரிடம்: சார் ராம்நாத் சார் வீடு இங்கு பக்கத்தில்தான் இருக்கும். நாம் அவர் வீட்டுக்கு போய்விட்டு போகலாம், என கூறிவிட்டு ராம்நாத்திற்கு போன் செய்து சார் எங்கே இருக்கிறீக என்று கேட்டார் மேனேஜர். சார் நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்றார். அப்படியானால் நாங்கள் வரும் வழியில், உங்கள் வீட்டிற்கு வந்து டீ குடித்து செல்கிறோம் என்றார். இதை ராம்நாத் எதிர்பார்க்கவில்லை. சார் நாங்கள் கோவிலுக்கு போயிருக்கிறோம். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றார்.
உடனே சரி இன்னொரு நாள் வருகிறோம் என்றார்.

தேவகி அம்மா, மேனேஜர் சார் இரண்டு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை. அவர் வீட்டிற்கு போய்தான் பார்ப்போம். இந்த இரண்டு மணி நேரத்தை அவர் வீட்டுபக்கம் ஏதாவது கோவில் இருக்கிறதா என்று கூகிள் சர்ச் (Google search) பண்ணுவோம் என்று கூறி தேவகி அம்மா செல்லில் பார்த்துவிட்டு, சார் அவருடைய வீட்டு முகவரி பக்கத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அங்கு போய்விட்டு அவருடைய வீட்டிற்கு போகலாம் என புறப்பட்டு அந்த தெருநோக்கி போகிறார்கள். அப்பொழுது கையில் பையுடன் தெருவில் ஒருவர் போய் கொண்டிருக்கிறார். வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. திரும்பி பார்த்தவுடன் ராம்நாத் சார் தான் கையில் பையுடன் சென்று கொண்டிருக்கிறார். அவரை பார்த்ததும் வண்டி நிற்கிறது. சார் என்று கூறி வண்டி டோர் திறக்கிறார். உடனே ராம்நாத் சார் இது தான் என் வீடு என்று காட்டுகிறார். உடனே எல்லோரும் இறங்கி வீட்டிற்குள் போகிறார்கள். வீடு அமைதியாக இருந்தது. குழந்தை எங்கே சார் என்றுன் கேட்கிறார். ஒருவித தயக்கத்துடன் அறையை காண்பிக்கிறார். நான்கு வயது குழந்தை, அறைக்குள் படுத்துக்கிடக்கிற ஒரு அம்மாவிற்கு வாயில் உணவு ஊட்டுகிறாள்.

இதற்கிடையில் மேனேஜர் சார் உங்க அம்மாவிற்கு 84 வயது என்றீர், ஆசிர்வாதம் வாங்குகிறேன் என்றார். உடனே இன்னொரு ரூம் காட்டுகிறார். அங்கேயும் ஒரு முதுமை பெண் படுத்துகிடக்கிறாள். அங்கே போகிறார்கள். அங்கே பார்க்கிற காட்சி எலும்பும் தோலுமாக முதுகில் புண்ணுடன். மேனேஜர் விசாரிக்கிறார். ராம்நாத் 4 வருடமாக அம்மாவிற்கு பக்கவாதம். இடது கை, கால் அசைக்கமுடியாது. படுத்த படுக்கையிலே தான் சிறுநீரும் மலமும் கழிக்கிறார். நான்தான் தற்பொழுது எல்லாம் கவனிக்கிறேன் என்றார். நேரம் ஆகிவிட்டது. புறப்படுகிறார்கள்.

மறுநாளும் வழக்கம் போல் தாமதமாக வருகிறார். இப்பொழுது யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. வந்த உடன் வேலைக்கு போகிறார். மனதில் நேற்று வீட்டில் யாரும் இல்லை என்று மேனேஜரிடம் கூறியது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மதியம் வழக்கம் போல் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சக ஊழியர் தேவகி அம்மா, மனைவியை பற்றி விசாரிக்கிறார்கள். அன்பான மனைவி திருமண நாள் அன்றே அவர்களுடைய அம்மா இனி ராம்நாத் அம்மா தான் உனக்கு அம்மா மாமியார் என்று பார்க்க கூடாது. அந்த வீட்டில் எந்த கஷ்டம் இருந்தாலும் நீ அங்குதான் இருக்கணும் உன்னுடைய வீடு அதுதான் என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்கள்.

வழக்கம் போல் ஆரம்பத்தில் சிறுசிறு சண்டைகள் நடக்கும், அம்மா எப்பொழுதும் கண்டிப்பாக இருப்பாள். எந்த பொருளை எடுத்தாலும் திருப்பி அதே இடத்தில் வைக்கணும், சுத்தமாக இருக்கணும். இது தான் அம்மா எதிர்பார்ப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி ரொம்ப பாசமாகிவிட்டாள். அம்மா மாதிரி சரியாக இருப்பாள். சொந்த மகள் கூட இப்படி கவனிக்க மாட்டாள். அந்த மாதிரி நன்றாக கவனிப்பாள்.

ஆரம்பத்தில் என் அம்மாவின் சிறுநீர் மலம் மற்றும் துணிகள் சுத்தம் செய்வது அம்பாவை குளிப்பாட்டி உணவு ஊட்டுவது இதை எல்லாம் சந்தோஷமாக கவனித்து வந்தாள். எட்டுமாதத்திற்கு முன்பு சொந்தகாரர் வீட்டிற்கு போய்விட்டு வரும் போது பின்னால் வந்த கார் இடித்து இடுப்பு எலும்பு முறிந்து விட்டது, ஆஸ்பத்திரியில் காண்பித்தோம், டாக்டர் ஒருவருடம் ஆகும் சரியாவதற்கு. அசையாமல் படுத்து இருந்தால் போதும் தானாக எலும்பு சேர்ந்து விடும் என்றார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் என் அம்மா,மனைவி குழந்தையை குளிப்பாட்டி ஆடை மாற்றுவது சமைப்பது குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது எல்லாம் நான்தான்.

ஆரம்பத்தில் எனக்கு கஷ்டமாக தோன்றவில்லை. இரண்டு பேரையும் நன்றாக கவனித்து வந்தேன். திடீரென்று என்னை குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு மாற்றிவிட்டார்கள். அந்த நேரத்தில் தொழிற்சங்க தலைவர் செயலாளரிடம் போய் அழாத குறையாக சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை.

ஏதோ காசு வாங்கிகொண்டு என்னை தென்காசிக்கு மாற்றிவிட்டார்கள். இதனால் வீட்டையும் கவனித்து அலுவலகத்துக்கு வந்து போவதில் கொஞ்சம் சிரமம். சில நேரம் வீட்டு வேலையில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் அந்த பஸ்ஸை பிடிக்கமுடியாது. அடுத்த BUS-க்காக காத்திருந்து வரவேண்டியிருக்கிறது. அதனால் தான் இன்னும் தாமதமாக வருகிறேன். வேண்டுமென்று நான் தாமதமாக வரவில்லை. காலை 4.30 மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு 10 மணிவரைக்கும் தொடர்ந்து வேலை சார். இதெல்லாம் எப்படிதான் செய்கிறீர்கள் என்று கேட்க நான் கடவுளிடம் கடைசிவரைக்கும் உடல் நலமும் மனவலிமையும் தரவேண்டும் என்று வேண்டுவதாக சொல்லிக்கொண்டே பாத்திரம் கழுவ சென்றுவிட்டார். தேவகி அம்மா, நான் என் கணவரையே இப்படி கவனித்திருக்கமாட்டேன் என்று மேனேஜரிடம் கூறினார். உடனே மேனேஜர் என்னுடைய அம்மா அப்பா ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். இவ்வளவு வசதி இருந்தும் கவனிக்க ஆள் இல்லாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளேனே கூறி தேவகி அம்மாவிடம் என வருத்தப்பட்டார்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

4 COMMENTS

  1. I am really inspired with your writing talents and also with the structure for
    your weblog. Is this a paid topic or did you customize it
    yourself? Anyway stay up the excellent quality writing,
    it is rare to peer a nice blog like this one today..

  2. excellent post, very informative. I ponder why the opposite experts of this sector don’t realize this.
    You must proceed your writing. I am confident,
    you’ve a great readers’ base already!

  3. I just like the valuable information you supply for your articles.
    I will bookmark your weblog and take a look
    at again here frequently. I am slightly sure I will learn plenty of new stuff right here!
    Good luck for the following!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here