மதநம்பிக்கைகளின் தாயகம் பாரதம்

0
152

சர்வதேச மத சுதந்திர அறிக்கை குறித்து அமெரிக்காவின் அறிக்கை, ‘பாரதம் பல்வேறு மத நம்பிக்கைகளின் தாயகம்’ என்று கூறுகிறது. இது குறித்து பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட்பிரைஸ், “நிச்சயமாக பாரதம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இது ஒரு பெரிய பன்முக நம்பிக்கைகளின் தாயகமாகும். சர்வதேச மத சுதந்திரம் பற்றிய எங்கள் வருடாந்திர அறிக்கையில் பாரதம் குறித்து வரும்போது நாங்கள் கவனத்தில் கொண்ட சில கவலைகளை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் அனைத்து நாடுகளிலும் உள்ள மத சுதந்திர சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனமாக கண்காணித்து வருகிறோம், அதில் பாரதமும் அடங்கும். அனைவருக்கும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் பாரத அரசின் உறுதிப்பாட்டை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தொடர்ந்து ஊக்குவிப்போம். மத சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுகிறோம். உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் பாரதமும், ஒரு நீடித்த திட்டத்திற்கும் உறுதியளிக்கின்றன” என்று கூறினார். சர்வதேச மத சுதந்திரம் குறித்த இந்த அறிக்கையில், சீனா, பாகிஸ்தான், மியான்மர், ஈரான், பர்மா, எரித்திரியா, வட கொரியா, ரஷ்யா, சௌதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் குறிப்பிட்ட மத அக்கறையுள்ள நாடுகள் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், அல்ஜீரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கொமொரோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் மதச் சுதந்திரத்தின் கடுமையான விதிமீறல்கள் உள்ளதால் அவற்றை சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளின்கன் ஒரு அறிக்கையில், அல் ஷபாப், போகோ ஹராம், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஹூதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ், ஜமாத் நுஸ்ரத் அல், இஸ்லாம் வால் முஸ்லிமின், தலிபான், வாக்னர் குழு உள்ளிட்ட அமைப்புகள், குறிப்பிட்ட மத அக்கறை கொண்டு செயல்படுபவை என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here