இன்று அகமதாபாத்தில் மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ள பிரமுக் ஸ்வாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
புனித பிரமுக் சுவாமி மகாராஜ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எண்ணற்ற மனங்களைத் தொட்ட ஒரு வழிகாட்டி மற்றும் குரு ஆவார். அவர் ஒரு சிறந்த ஆன்மீகத் தலைவராக மதிக்கப்பட்டு போற்றப்பட்டார். அவரது வாழ்க்கை ஆன்மீகம் மற்றும் மனிதநேய சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் (BAPS-பாப்ஸ்) ஸ்வாமிநாராயண் சன்ஸ்தாவின் தலைவராக, அவர் எண்ணற்ற கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக முயற்சிகளை ஊக்குவித்து, கோடிக்கணக்கான மக்களுக்கு அன்பும் ஆறுதலும் வழங்கினார். மதிப்புக்குரிய பிரமுக் சுவாமி மகாராஜின் பிறந்த நூற்றாண்டு விழாவில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரது வாழ்க்கையையும் பணியையும் கொண்டாடி வருகின்றனர். உலகக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் ‘பிரமுக் ஸ்வாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவ்’ என்ற பெயரில் பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் உலகளாவிய தலைமையகமான ஷாஹிபாக், பாப்ஸ் ஸ்வாமிநாராயண் மந்திர் ஒன்றிணைத்து மாபெரும் விழாவாக நடத்துகிறது. இது ஒரு மாத கால கொண்டாட்டமாக 15 டிசம்பர் 2022 முதல் 15 ஜனவரி 2023 வரை அகமதாபாத்தில் நடைபெறும். இதில் தினசரி நிகழ்வுகள், கருப்பொருள் கண்காட்சிகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் அரங்குகள் இடம்பெறும்.
பாப்ஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தா 1907-இல் மகாராஜால் சாஸ்திரி அவர்களால் நிறுவப்பட்டது. வேதங்களின் போதனைகளின் அடிப்படையிலும் நடைமுறை ஆன்மீகத்தின் தூண்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட பாப்ஸ் இன்றைய ஆன்மீக, தார்மீக மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள அனைவரையும் சென்றடைகிறது. பாப்ஸ் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற சேவையின் மதிப்புகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு மக்களின் ஆன்மீக, கலாச்சார, உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளையும் வழங்குகிறது. உலகளாவிய ரீதியிலான முயற்சிகள் மூலம் மனிதாபிமான செயல்களை மேற்கொண்டு வருகிறந்து.